ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள ஏரியை தூர்வார கோரி கடந்த வாரம் தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை தூர்வார வேண்டிய நடவடிக்கைகள் எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய தினத்தந்திக்கும் அந்தபகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.