திசையன்விளை தாலுகா நவ்வலடி பஞ்சாயத்து கோடாவிளையில் இருந்து கரைச்சுத்துபுதூருக்கு ேராடு செல்கிறது. ஆனால் வழிகாட்டி பலகை இல்லாததால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட ரோடு எங்கே செல்கிறது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஆகவே கரைச்சுத்துபுதூர் செல்லும் வழி என வழிகாட்டி பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.