திண்டுக்கல் பர்மா காலனி குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை சூழ்ந்தபடி மழைநீர் தேங்கி நிற்கிறது. முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.