கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரேஷன் கடை கட்ட ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் ெதாடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடை கட்டும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.