கோவை மாநகராட்சி 29-வது வார்டு கணபதிபுதூரில் டெக்ஸ்டூல் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் கட்டியபோது, கீழ் பகுதியில் மண் கொட்டப்பட்டு இருந்தது. இதுவரை அகற்றப்படாததால், மண் மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த மண்ணை அகற்றிவிட்டு, தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.