சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும், கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரவேல், ஓமலூர், சேலம்.