பாதுகாப்பற்ற குடியிருப்பு
பல்லடம் தாலுகா, ஆறுமுத்தாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, அறிவொளி நகரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சில நூறு பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. அந்த பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. பயனாளிகள், அங்கு குடி வர அச்சப்படுகிறார்கள். சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின் பொருட்கள் திருட்டு போனது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த குடியிருப்பு மக்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
-துரை, கரையாம்புதூர். 6374 143 440