தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி சின்னரெட்டிஅள்ளி கிராமத்தில் மயான பகுதி முழுவதும் முட்செடிகள் அதிகளவு முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் ஊராட்சி குப்பை கழிவுகளையும் மயானத்திலேயே ஊராட்சி நிர்வாகம் எரிக்கிறது. இதனால் அப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்லும் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மயான வளாக பகுதியில் உள்ள முட்செடிகளை அகற்றி குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.
-சதீஷ், தர்மபுரி.