கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறுகலாக உள்ள இந்த சாலையில் நீண்ட நேரம் பஸ்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த சாலையில் அதிக நேரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.