பெங்களூரு காட்டன்பேட்டை சித்தார்த்நகர் பகுதியில் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கால்வாயில் இருந்து கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகிறது.
அந்த கொசுக்கள் கடிப்பதால் மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் உடல்நலனை காக்கும் வகையில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.