பெங்களூரு மத்திகெரே எச்.எம்.டி. மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. இதுகுறித்து குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை.
தண்ணீரை கவனமாக செலவு செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்காமல், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.