திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?