ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரை

Update: 2022-09-23 13:07 GMT

நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் பகுதியில் மானங்கொண்டான் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வசதி பெற்று வந்தனர். மேலும் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்திவந்தனர். தற்போது இந்த ஆற்றை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. அவை அழுகி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்