நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. ெரயில்களில் வருகின்ற பயணிகள் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு லிப்ட் (மின் தூக்கி) உள்ளது. முதலாவது பிளாட்பாரத்திலும், மூன்றாவது பிளாட்பாரத்திலும் `லிப்ட்' செயல்படுகிறது. ஆனால் 4-வது, 5-வது பிளாட்பாரத்திற்கான `லிப்ட்' வேலை இன்னும் முடியவில்லை. இதனால் இந்த பிளாட்பாரங்களில் ரெயில்களில் வந்து இறங்குகின்ற பயணிகள், முதல் பிளாட்பாரத்திற்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, உடனே இந்த பிளாட்பாரத்தில் `லிப்ட்' அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.