நாய்கள் தொல்லை

Update: 2022-09-23 11:29 GMT

அந்தியூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ரோட்டில் ஓடுகின்றன. அப்படி ஓடும் நாய்கள் ரோட்டில் செல்லும் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே விழுந்து செல்கின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் படுகாயம் அடைகிறார்கள். எனவே ரோட்டில் சுற்றித்திரிந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ெதால்லை கொடுக்கும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்