புதிய சமுதாயக்கூடம் கட்டப்படுமா?

Update: 2022-09-23 11:20 GMT

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொது மக்களின் வசதிக்காக சமுதாய கூடம் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த சமுதாயக்கூடம் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த சமுதாயக்கூடத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சமுதாய கூடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்