நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி ஊராட்சி மாருதிநகரில் அரசு அலுவலர் குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றி உள்ள சாக்கடை கால்வாய்கள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.