தர்மபுரி மாவட்டம் சிந்தல்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நுழைவுவாயில் கட்டிடங்கள் சேதமடைந்து பல நாட்கள் ஆகிறது. இதனை சரி செய்ய பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் மது அருந்தும் கூடாரமாக மாறுகிறது. இந்த பள்ளியில் காம்பவுண்டு சுவர் மற்றும் நுழைவுவாயில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், அம்பாலப்பட்டி தர்மபுரி