தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு பாழடைந்த நிலையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் பாம்புகள் புகுந்து விடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தை சீரமைத்து புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.