பெங்களூரு பனசங்கரி மெயின் சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் நிற்கும் வாகனங்களை அகற்ற வேண்டும்.