திருக்குறுங்குடி கைகாட்டி ஜங்சனில் முன் காலத்தில் தமிழக அரசின் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் எஞ்சிய சுவர்கள் வரலாற்றின் சின்னமாக காட்சி அளிக்கிறது. பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இந்த இடம் பாழடைந்து, செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. புதர்களுக்குள் விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன. இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.