கோபியில் அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஒரு ரோடு செல்கிறது. அந்த ரோட்டின் கடைசியில் வெட்டப்பட்ட மரத்தின் பாகம் மற்றும் அதன் காய்ந்த கிளைகள் கிடக்கின்றன. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது ஒன்றுக்கொன்று விலக முடியாத அளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மரத்தின் பாகம் மற்றும் அதன் கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.