விருத்தாசலம் நகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களை துரத்திச் சென்று கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால், அவர்கள் அச்சத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.