சாலையோர அங்கன்வாடி மையம்

Update: 2022-09-21 16:06 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காமராஜா பேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் குழந்தைகள் பெரும்பாலும் சாலை ஓரமே விளையாடி வருகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

-அருள், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்