எரியாத உயர்கோபுர விளக்கு

Update: 2022-09-21 16:02 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இரவு நேர வாகன விபத்தை தவிர்க்கும் பொருட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. அந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் காயம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகள் இதனை விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்கோபுர விளக்கை சரிசெய்து எரிய செய்ய வேண்டும்.

-ராமலிங்கம், தொப்பூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்