பெங்களூரு ஜெயநகர் மாரனஹள்ளி ரோட்டில் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிலையத்தையொட்டியுள்ள சாலையில் கார்களை வாகன ஓட்டிகள் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கார்களை நிறுத்தி செல்பவர்கள் பல மணி நேரம் கழித்து வந்து தான் கார்களை எடுத்து செல்கின்றனர். கார்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?