பெங்களூரு எலகங்கா ஜூடிசியல் லே-அவுட் 23-வது கிராஸ் 18-வது மெயின் பகுதியில் சாலையோரம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 3 சிலிண்டர்கள் நீண்ட நாட்களாக கிடக்கின்றன. அந்த சிலிண்டர்களில் குறைந்த அளவில் கியாஸ் உள்ளது. வெயில், மழையிலும் சிலிண்டர்கள் அங்கேயே கிடக்கிறது. வெயிலில் கிடப்பதால் சிலிண்டர்கள் வெடித்து சிதறி விடுமோ என்ற பயத்தில் குடியிருப்புவாசிகள் உள்ளனர். இதனால் அந்த சிலிண்டர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-----
-----