பெங்களூரு டாலர்ஸ் காலனி நியூ பி.இ.எல். ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் நிறுவனத்தின் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தனியார் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. அந்த தனியார் நிறுவனம் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?