மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா செம்மனிப் பட்டியில் பல மாதங்களாக பாலம் கட்டும் பணி முடிவடையாமல் உள்ளது. மேலும் இந்த பாலத்தில் மோல்டு அடைத்தும் அடைக்காமலும் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் வெளியூர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி தனியார் வாகனங்களில் செல்கின்றனர். எனவே இந்த பாலத்தை விரைவாக கட்டி முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.