வாகனங்கள் நிறுத்துவது முறைப்படுத்தப்படுமா?

Update: 2022-09-21 14:24 GMT

கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. மேற்படி மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், நோயாளிகளும் மேற்படி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் செல்கின்றனர் மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த நிலையில் மேற்படி அரசு மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் அனைவருக்கும் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் நுழைவாயிலில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் இதர வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு மருத்துவமனையின் வெளிப்புறப் பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தத்தை முறைப்படுத்தி இதர வாகனங்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நிறுத்த வேண்டும். சில சமயங்களில் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் சிக்ச்சை பெற்று திரும்பும்போது நிறுத்தியுள்ள வாகனங்களை திரும்ப எடுக்க வரும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், அருகில் நிறைய தள்ளுவண்டி கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மேற்படி இடத்தில் வாகனங்களை முறையாக நிறுத்தத் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் பொது மக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


மேலும் செய்திகள்