கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-21 13:07 GMT
கடையத்தில் இருந்து பாவூர்சத்திரம் செல்வதற்கு புறங்காட்டான்புலியூர், செக்கடியூர், அருணாசலம்பட்டி, கட்டேரிப்பட்டி உள்ளிட்ட ஊர்கள் வழியாக தடம் எண்-27இ என்ற பஸ் தென்காசி-கடையம் (பாவூர்சத்திரம் வழி) வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சில நாட்கள் வருவதில்லை. மேலும், இந்த வழித்தடத்தில் காலை 10.30 மணிக்கு பிறகு மதியம் 1 மணிக்கும், மாலை 3.30 மணிக்கு பிறகு 6 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு பிறகு மறுநாள் காலை 6 மணிக்கு தான் பஸ் வசதி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, மதியம் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கும் கடையத்தில் இருந்து பாவூர்சத்திரம் செல்வதற்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்