கோவை கவுண்டம்பாளையம் ஆர்.எஸ். நகரில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையின் நடுவே நின்று கொண்டு வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதேபோல் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளையும் மற்றும் பொதுமக்களையும் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் அச்சப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திாியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.