மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். நாய்கள் தொல்லையால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?