சாலையை சூழ்ந்த புதர் செடிகள்

Update: 2026-07-12 10:00 GMT

கோத்தகிரி கடைவீதியில் இருந்து பொது மயானம் வழியாக குன்னூர் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. அத்துடன் சாலையோரம் வனவிலங்குகள் நின்றால் கூட வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலையை சூழ்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்