கண்காணிப்பு கேமரா தேவை

Update: 2026-07-12 07:32 GMT

 ஆற்றூர் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள்,மருத்துவமனைகள் உள்ளன. மேலும், குலசேகரம், மார்த்தாண்டம், அருமனை ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கும் முக்கிய சந்திப்பாக ஆற்றூர் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் சமூக விரோத செயல்களை தடுக்க எந்த கண்காணிப்பு கேமராக்களும் இல்லை. இதன்காரணமாக அங்கு திருட்டு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆற்றூர் சந்திப்பு பகுதியல் காண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அகஸ்டின், ஆற்றூர்.

மேலும் செய்திகள்