சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தங்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் குறிப்பாக பெண்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் எதிரே பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளும் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.