திருப்பூர் கணபதிபாளையம் அருகே கள்ளிமேடு பகுதியில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை.இதையொட்டிமெயின்ரோடு செல்கிறது. இரவு நேரங்களில் இங்கு கூடும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் பாட்டிலை உடைத்தும் போடுகின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.