ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுவாத்தான் கிராமத்தில் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் உள்ளனர். ஆனால் இங்கு நூலகம் இல்லாததால் இவர்கள் கல்வித் தேடலுக்கு பரமக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக நூலகம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.