பழுதடைந்த சுகாதார வளாகம்

Update: 2022-07-13 17:55 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள பெண்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் அதனை பயன்படுத்தாமல் இருந்தனர். அதனால் சுகாதாரவளாகம் முழுவதும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிதாக சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்