கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் வாகனங்களில் செல்வோர்களை கடிக்கும் நோக்கத்தோடு துரத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பயத்தில் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது அதிகமாக காணப்படும் தெரு நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.