விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இளந்தோப்பு அரசு மருத்துவமனை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.