தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, டூவிபுரம் சங்கரநாராயணன் பிள்ளை பூங்காவும் பராமரிக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் பூங்காவுக்குள் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர், சிறுமிகள் விளையாட மிகவும் அச்சப்படுகின்றனர். ஆகையால், பூங்காவுக்குள் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.