புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-09-20 13:21 GMT

நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பெரியார்நகர் அங்கன்வாடி கட்டிடம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளதாகவும், அதை மாற்ற வேண்டும் என்றும் வீரவநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைத்து உள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்