விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க அமைக்கப்பட்டுள்ள அறை பயன்பாடின்றி பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் பொருட்கள் பாதுகாப்பு அறையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?