நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள்

Update: 2022-09-19 16:26 GMT

தர்மபுரி நகரில் பிடமனேரி ரோடு மாவட்ட விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவரையொட்டி உள்ள நடைபாதையில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. அந்த கடைகளால் அந்தப் பகுதியில் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், அண்ணா நகர், தர்மபுரி.

மேலும் செய்திகள்