தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்லானஅள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. தற்போது இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், குட்லானஅள்ளி, தர்மபுரி.