தர்மபுரி மாவட்டம் எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி எர்ரப்பட்டியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சுற்றி முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் பெண்கள் இதனை பயன்படுத்துவது இல்லை. இதனால் மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை சீரமைத்து முட்புதர்களை அகற்றி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நதியா, எர்ரப்பட்டி, தர்மபுரி.