கிருஷ்ணகிரி நகரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. ஏ.டி.எம். எந்திரத்தில் பணமும் வைக்கப்படுவதில்லை. குறிப்பாக கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலான நாட்கள் வேலை செய்வதில்லை. இதனால் அவசர தேவைக்கு பணம் எடுக்க வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.