அரியலூர் தாலுகா அலுவலகத்தின் எதிரே இ.சேவை மையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து வாரிசு சான்றிதழ், முதியோர் உதவித்தொகைகாக ஆன்லைன் பதிவு செய்து வருகின்றனர். இதனால் இ-சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் வரிசையில் காத்து இருக்கின்றனர். ஆனால் அந்த இடத்திற்கு மின்விசிறி இல்லை. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதி அடையும் நிலை ஏற்பட்டுன்ளது. எனவே அங்கு ஒரு மின்விசிறி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.