திருச்சி மாவட்டம், சமயபுரம் கோவிலுக்கு செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவிலான மழைநீர் வடிகால் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.